ஒசாமாவை சுட்டது யார்? அமெரிக்க கடற்படை தகவல்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த, சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லாடனை, மூன்று முறை தலையில் சுட்டதாக, அமெரிக்க கடற்படை வீரர் தெரிவித்துள்ளார்.அல் குவைதா தலைவர் ஒசாமா, 2011ம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது, அமெரிக்க படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டான்.இந்த துப்பாக்கி சூடு, யாரால் நடத்தப்பட்டது என்ற விவரம், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ஒசாமாவை சுட்டுக் கொன்றவர், அந்நாட்டு கடற்படையை சேர்ந்தவர். இருப்பினும், ஒசாமாவை கொன்ற நபரின் பெயரை வெளியிட அமெரிக்க கடற்படை மறுத்துவிட்டது.ஒசாமாவை கொன்ற, கடற்படை வீரர் கூறியதாவது:நாங்கள் தாக்குதல் நடத்திய அன்று, ஒசாமா, தன் கடைசி மனைவியுடன் இருந்தார்.
ஒசாமாவின் அருகிலேயே, ஏ.கே 47 ரக துப்பாக்கி இருந்தது, அதை அவர் எடுக்க முயன்ற போது, நான் ஒசாமாவை சுட்டேன். ஒசாமா எப்படி இருப்பார் என்பதில் எனக்கு சிறிய சந்தேகம் இருந்தது, அவரை நெருங்கிய பின், மிக உயரம் கண்டு, ஒசாமா என்பதை உறுதி செய்தேன். நான் அவன் தலையில் சுட வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தேன். அதன் படியே, சரியாக அவன் நெற்றியில், என் முதல் குண்டு பாய்ந்தது.
அவன் முன்னோக்கி சாய்ந்தான். உடனே அடுத்த குண்டும், அவன் நெற்றியில் பட்டதில் அவன் நிலை குலைந்தான். அவன் சாய்ந்து கீழே விழுகையில், நான் எய்த மூன்றாம் குண்டும், அவன் மேல் பாய்ந்தது. இறுதியில், அவன் மூச்சு அடங்கியது; 15 வினாடிகளுக்குள், அவன் கதை முடிந்து விட்டது.கடைசி நேரத்தில், நாங்கள் வந்த ஹெலிகாப்டரில் ஒன்று, செயல் இழந்தது. அப்போது, அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்ற அச்சம், எங்களை தொற்றிக் கொண்டது. ஒரு வழியாக, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினோம்.இவ்வாறு அமெரிக்க கடற்படை வீரர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply