நடுக்கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் 38 பேர் மீட்பு

மட்டக்களப்பு கடற்பரப்பில் 225 கிலோ மீற்றர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.இன்று  இந்த நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். காலி துறைமுகத்திலிருந்து சாகர எனும் கப்பல் கடலுக்குச் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்களை மீட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார்.இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏனையவர்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இவர்கள் சில நாட்களாக உணவு நீர் இல்லாது கடலில் தத்தளித்ததால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் மியன்மார் நாட்டவர்களாக இருக்கலாம் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply