ரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல்

ரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல் வெளிப்படுத்திய சக்தி இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த ஆயுதங்களின் சக்தியைவிட அதிகம் என நாசா மதிப்பிட்டுள்ளது.இது குறித்து நாசா எரிகல் சூழலியல் தலைவர் பில் குக்கி கூறியதாவது: இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களின் சக்தியை விட அந்த எரிகல் பூமியில் மோதியபோது வெளிப்பட்ட சக்தி அதிகம். அந்த நெருப்புக்கோளம் சூரியனை விட பிரகாசமாக எரிந்தது. அதில் இருந்து 50 ஆயிரம் கிலோ அளவுள்ள எரிசக்தி வெளிப்பட்டது. இது, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட 30 மடங்கு அதிகம்.

மணிக்கு 6 லட்சத்து 43 ஆயிரத்து 734 கி.மீட்டர் வேகத்தில் மோதிய அந்த எரிகல் வெடித்த 32.5 விநாடிகளுக்கு வளிமண்டலத்தில் 24 கி.மீ. தொலைவு வரை அதன் ஒளிப்பிழம்பு தெரிந்தது என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

1908ஆம் ஆண்டுக்குப் பின் விழுந்த எரிகற்களிலேயே இதுதான் மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply