இந்திய தூதரகத்தில் இருக்கும் நசீத்தை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு மாலத்தீவு கோர்ட் உத்தரவு
மாலத்தீவின் முன்னாள்
தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இந்திய தூதரகத்தில் கடந்த 13-ம் தேதி தஞ்சம் அடைந்தார். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அவருக்கு புகலிடம் அளிப்பதை கைவிட்டு, அவரை ஒப்படைக்க வேண்டும் என்று மாலத்தீவு அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இன்று இந்திய தூதரை அழைத்து கண்டனமும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், முகமது நசீத்துக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் புதன்கிழமை மாலை 4 மணியுடன் முடிகிறது. எனவே அந்த காலக்கெடுவுக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘முன்னாள் அதிபர் நசீத்தை புதன்கிழமை 4 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்திய தூதரகத்துடன் பேசி நசீத்தை கைது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்டிருக்கிறோம்’ என்றார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக நசீத் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், செப்டம்பர் மாதம் 7-ம்தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply