அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்க தீர்மானம்

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதை இலக்காக கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒஸ்ரியா, அயர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவிற்சர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, மொன்ரினிக்ரோ, போலந்து, ருமேனியா ஆகிய 10 நாடுகள், வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply