பதவி விலகும் போப் ஆண்டவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன்?
தற்போது 16-ம் பெனடிக்ட் போப் ஆண்டவராக பதவி வகித்து வருகிறார். அவர் வருகிற 28-ந்தேதியுடன் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில், பதவி விலகும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டுக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன் தொகையாக வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்யவில்லை.
இது குறித்து வாடிகன் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பாதிரியின் பெடரினோ லோம்பின்டி கூறும்போது, “பதவி விலகும் போப் ஆண்டவர் கடந்த வாரம் தனக்கு எதுவும் வேண்டாம் என கூறினார். ஆனால் அவர் கவுரவமாக வாழ ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply