மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்
மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கூட்டுறவு சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரம் கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டதோடு ஆர்ப்பாட்டத்திற்கு, மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய மற்றும் உள்ளூர் இழுவைப் படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல், கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்க வேண்டும், சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply