ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்து சு. சாமி வீட்டின் மீது தாக்குதல்
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீட்டின் மீது இன்று காலை மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் 35 பேர் தாக்குதல் நடத்தினர்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனை அறிந்த பொலிசார் சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி டெல்லியில் இருப்பதால், முறைப்பாடு செய்ய முடியவில்லை.
இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸரால் கைது செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply