வெனிசூலாவின் புரட்சித் தலைவர் காலமானார்!

வெனிசூலா நாட்டின் சாவிஸ் நேற்று மாலை மரணமடைந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இணையற்ற தலைவர், 21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடமைவாதி என பல விதமாக புகழப்பட்ட சாவிஸ் உயிரிழக்கும்போது அவருக்கு வயது 58.சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குரியது இதற்கு காரணம் சாவிஸாகும்.இதனால் அந்நாட்டின் புரட்சித் தலைவர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார்.சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பிரமாண்ட வெற்றி பெற்று நான்காவது முறையாக அவர் ஜனாதிபதியான பின்னரே, உலகம் அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்தது.

சாவிஸ், உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் ஏற்படாமல் முழு மூச்சாக செயற்பட்டார். ஆனால் இந்த வெற்றியையும் அவர் நினைத்த அரசியல் மாற்றங்களையும் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார் சாவிஸ்.

புற்று நோய் தாக்கப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன.

எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சை முடிந்து வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் கடந்த மாதம் 19 ஆம் தேதி நாடு திரும்பினார்.

வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவிஸுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அவருக்கு புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து அவர் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார்.

சாவேஸின் மரணம் அந்நாட்டு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குப் பின் வெனிசூலாவின் அரசியல் நிலைமை என்னவென்பது தொடர்பில் அனைவரது கவனதும் திரும்பியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply