மீண்டும் கைதானார் மாலத்தீவு முன்னாள் அதிபர்
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது நஷீத் அதிபராக இருந்த போது, தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்ட வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக முகமது நஷீத் மீது ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அவர் மீதான பிடிவாரண்ட்டை விலக்கிக் கொள்வதாக மாலத்தீவு அரசு அறிவித்தது.
அதனையடுத்து நசீது இந்தியத் தூதரகத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் மீது மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply