மத்திய அரசிற்கு பாதிப்பு எதுவுமில்லை

பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டாணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   தமிழக கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அரசு தேவையான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும், தற்போதைய நெருக்கடியில் ஐ.மு அரசுக்கு எந்த ஆபத்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்திக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் இன்று உறுதியான தீர்மானம் ஒன்றை அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்கள் குறித்து இந்திய பாராளுமன்றில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டால் மீண்டும் கூட்டணியுடன் இணைவது பற்றி சிந்திக்க முடியும் என கருணாநிதி தெரிவித்ததாக சிதம்பரம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply