மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகல்: கருணாநிதி அறிவிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் சற்றுமுன் பேசிய போதே திமுக தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அங்கு மேலும் பேசிய கருணாநிதி,  அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை.  

எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

இதனிடையே காங்கிரஸ் நிலையில் ஏமாற்றமடைந்துள்ள தி.மு.க., அமைச்சர்கள் இன்று (19) மாலை தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply