இலங்கையை கண்டித்து டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், அது குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் மே 12ஆம் திகதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் கூறினார்.
அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தை அடுத்து முகுந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் நிலைநிறுத்தப்பட்டு, சம உரிமையுடன் வாழ வகை செய்யப்பட வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை.
அண்மையில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானமும் நீர்த்துப் போனதால், ஈழத் தமிழர்களுக்கு எந்த விடியலும் இல்லை.
தமிழீழம் குறித்து, இலங்கையில் வாழும் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இலங்கை குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. மன்றத்துக்கு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply