கடும் தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் மேர்வின் எச்சிக்கை

இலங்கை யாத்திரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக மிக விரைவில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், சிங்கள பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க முடியாது.

வழிப்பாட்டு தளங்களுக்கு இலங்கையர்கள் உட்பட மத தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்த இரத்த உறவுகள் நாங்கள். இந்த இரத்தம் எப்போதும் பின்நோக்கி சென்றதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply