ஈழத்தமிழ் சமுதாயம் வேறுபட்டதால்தான் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவிக்கின்றனர்

கோபி நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக மாணவர்கள் இடையே பெருத்த எழுச்சி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 1960-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோன்ற எழுச்சி வந்துள்ளது. இந்த நிலைவர காரணமே தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒரு மித்த கருத்து இல்லாததே ஆகும்.

அதனால்தான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாகட்சி இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமைகள் பெற வேண்டும். சர்வ சுதந்திரமாக இருக்க வேண்டும் இதற்கு உலக நாடுகள் இடையே ஆதரவு கிடைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

தமிழக மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு தள்ளி போவதால் வாழ்க்கை ஒரு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. 1960ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நிறையபேர் தங்கள் வாழ்ககையை தொலைத்தனர். இலங்கையில் தமிழ் சமுதாயம் வேறுபட்டதால் தான் தமிழர்கள் சொல் லொண்ணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

கேரளாவில் 2 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு 2 இத்தாலி வீரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுமுறைக்காக இத்தாலி சென்றனர். அங்க இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வர மறுத்தனர்.

உடனே கேரளாவில் உள்ள 20 எம்,பி.க்கள் குரல் கொடுத்ததால் இத்தாலி வீரர்கள் இந்தியா திரும்பினர். ஆனால் பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள 40 எம்.பி.க்கள் ஒருமித்த கருத்தோடு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் வாக்கு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply