முள்ளியவளை குடியேற்றுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மட்டுமே இருந்துவருகின்ற சூழ்நிலையில் மாவட்ட செயலாளரை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதியின் விசேட குழு மக்களுக்கு காணிகளை வழங்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது என இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற நிபுணர் குழுவுக்கு அரச காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவுள்ளது என்று பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply