தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கட்சியை பதிவு செய்வது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பு பிளவடைவதனைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளுமாறு சிரேஸ்ட உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply