இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் உண்ணாவிரதப் போராட்டம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று (02) நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்துகிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜீத், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொள்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.
மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாலச்சந்திரன் படங்களை ஏந்தியபடி ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி போர்க்குற்றவாளி எனவும் அவரை கூண்டிலேற்றி தண்டிக்க கோரியும் போரா வருகின்றனர். தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு.
அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது.
இதில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.
நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பிவிட்டனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.
உண்ணாவிரத போராட்டத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது.
காலையிலேயே கடும் கொளுத்த ஆரம்பித்துள்ளது. ஆனாலும் நடிகர் நடிகைகள் திரளாக வர தொடங்கியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply