பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் இலங்கை விஜயம்

பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 4ம், 5ம் திகதிகளில் ஜலீல் அப்பாஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜலீல் அப்பாஸ், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

ஜலீலின் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply