சட்டவிரோத ஆட்கடத்தல்: அவுஸ்திரேலியா – இலங்கை பேச்சு

படகுப் பயணிகள் குறித்து அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நீதி அமைச்சரும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் மற்றும் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் அகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாலி தீவுகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் கட்டுப்படுத்தல் தொடர்பான மாநாட்டில் இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 37 நாடுகள் பங்குபற்றியுள்ளன.இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அமைச்சர் ஹக்கீம் விளக்கியுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிராந்திய வலய நாடுகளில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலிய அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply