உஷ்ணமான காலநிலை இந்த மாத இறுதி வரை நீடிக்கும்

தற்பொழுது காணப்படும் உஷ்ணமான காலநிலை இந்த மாத இறுதி வரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் கூறியது. எதிர்வரும் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதோடு இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் வெப்பம் சற்று அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நாட்டின் உஷ்ண காலநிலை காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் வெப்பமான காலநிலை காணப்படும், என்று கூறிய காலநிலை அவதான நிலையம் நுவரெலியா அடங்களான மத்திய மாகாணங்களிலும் வெப்பநிலை உயர்வாக இருப்பதாக குறிப்பிட்டது.

எதிர்வரும் தினங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை சிறிது மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையுடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறித்து கவனமாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மே மாதத்தில் பருவமழை மீண்டும் ஆரம்ப மாவதோடு உஷ்ண காலநிலை படிப்படியாக குறையும் என அறிவிக்கப்படுகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply