டில்லி சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை இனப்படுகொலையாக அறிவிக்க முடியாது – அமெரிக்கா
டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை, இன படுகொலையாக அறிவிக்க முடியாது, என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த, 1984ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, சீக்கிய பாதுகாவலர்களால், சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
“இந்த சம்பவத்தில், இந்தியாவில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, இந்நிகழ்ச்சியை மனித படுகொலையாக, அறிவிக்க வேண்டும்´ எனக் கோரி, அமெரிக்காவில் உள்ள சீக்கிய மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி, ஒபாமா அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த அமெரிக்க அரசு,”கடந்த 84ல், சீக்கியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடந்துள்ளது.
எனினும் இச்சம்பவத்தை இன்படுகொலையாக அறிவிக்க முடியாது´ என, தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply