படுகொலை குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் – ஏ.சீ.எப்
திருகோணமலை – மூதூர் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை சந்தேகநபர்கள் விரைவில் கண்டுபடிக்கப்பட வேண்டும் என பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏ.சீ.எப். வலியுறுத்தியுள்ளது. படுகொலை குறித்த விசாரணைகளை உரிய முறையில் நடாத்துமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
2006ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
படுகொலை தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மாத்திரமே இலங்கையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரையில் அவ்வாறான வெளிப்படை விசாரணைகள் இதுவும் நடாத்தப்படவில்லை என நிறுவனம் சுட்டிக்கட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply