நெல்சன் மண்டேலாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தேரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேரி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அவர் கடந்த டிசம்பர் மாதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1990ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறிதன் பின்னர், நீண்டநாட்கள் கடந்த டிசம்பர் மாதமே அவர் அதிக நாட்கள் வைத்தியசாலையில் கழித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply