கூடங்குளம் மின் உற்பத்தி இம்மாதம் ஆரம்பம்
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேயே அங்கு மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட நிபுணர்கள் அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளையும் பரிசோதித்துப் பார்த்ததில் அனைத்தும் ஒழுங்காக இயங்குவதாகத் தெரியவந்துள்ளது என்று பிரதமர் அலுவலத்துக்கு பொறுப்பான மத்திய இணை அமைச்சர் கூறினார்.
கூடங்குளத்தில் இறுதி கட்ட சோதனகள் முடிவடைந்துள்ளதாக அந்த அணுமின் நிலையத்தின் இயக்குநரும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதம் திறக்கப்பட்டுவிடும் என இந்தியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் ரஷ்ய அதிபருக்கு வாக்குறுதி அளித்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கப்படக்கூடாது என வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துவருவோர் புதனன்றும் கடலில் படகுகளை வரிசையாக நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply