அவுஸ்திரேலியா சென்ற மேலும் 20 இலங்கை அகதிகள் நாடு கடத்தல்
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேலும் 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இவ்வாறு புகலிடம் நிராகரிக்கப்படும் நபர்கள் நாடு கடத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் 13ம் திகதியில் இருந்து இதுவரை 936 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 756 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வர விரும்பும் அகதிகளுக்கு நாடு கடத்தல் விடயம் ஒரு அபாய செய்தி என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply