இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைது
தோடியக்கரை அருகே 5 விசைபடகுகளில் மீன்படித்துக் கொண்டிருந்த பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (05) இரவு காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டோர் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த மீனவர்கள் தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply