இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை வரவுள்ளது
தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளது. 6 பேர் கொண்ட இக்குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
9 ஆம் திகதியன்று இலங்கை வரும் இக்குழு, மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சென்று, அங்குள்ள சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இக்குழுவில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply