பிரசாத் காரியவசம் தொடர்பான இந்தியாவின் பிரச்சாரங்களை இலங்கை நிராகரிப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை நிராகரிப்பதாக அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மிகவும் திறமையான சிரேஷ்ட அதிகாரி எனவும் திறமையானவர்கள் என்ற காரணத்தினாலேயே அவர் இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் தவறான கருத்துக்களை வெளியிடுவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் யாப்பா, இந்திய அரசியல்வாதிகளினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம், உயர்ஸ்தானிகரை அழைத்து விளக்கங்களையும் கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply