ஜனாதிபதி தலைமையில் அறுவடைப் புதிர்ப்பொங்கல் விழா நாளை

அரச அனுசரணையில் நடைபெறும் அறுவடைப் புதிர்ப்பொங்கல் விழா நாளை அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் நடைபெறவுள்ளது. மன்னர் காலந்தொட்டு வருடா வரு டம் நடத்தப்படும் இந்த விழா இம் முறை 46 ஆவது தடவையாக அநுராதபுர ஸ்ரீமாபோதி விஹாரையில் நடை பெறவுள்ளதுடன் நாடளாவிய ரீதியிலிரு ந்து பல்லாயிரக் கணக்கான விவசா யிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெரும் போக அறுவ டையின் பின்னர் அந்த புதிர் நெல்லை ஸ்ரீமாபோதிக்குப் படைத்து பொங்கலிட்டு நாடு அரிசியில் தன்னிறைவு காண்பதுடன் பொருளாதாரத்தில் நாடு சுபீட்சமடையவும் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இம்முறை சிறப்பு அம்சமாக நாட்டினதும் நாட்டு மக்களினதும் சுபீட்சத்துக்காக விசேட மத வழிபாடுகள் நடைபெறவுள்ளன. பெளத்த மத மகாநாயக்கத் தேரர்கள் இந்த வழிபாடுகளை நடத்தவுள்ளனர்.

அமைச்சர்கள் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள்- மாகாண முதலமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply