வாக்காளராக பதிவுசெய்து கொள்ளுமாறு டளஸ் பொன்சேகாவிடம் கோரிக்கை
சரத்பொன்சேகா தனது கட்சியை பதிவு செய்தது போல, தன்னையும் வாக்காளராக பதிவுசெய்து கொள்ளுமாறு கொள்ளுமாறு தாம் அவரிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியை ஆரம்பிக்கவும் கருத்துக்களை வெளியிடவும் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அது ஜனநாதயகத்தின் அடிப்படை உரிமையாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவின் குடியுரிமை இராணுவ நீதிமன்றத்தினால் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை வாக்காளராக பதிவுசெய்து கொள்ளவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்பது குறிப்பிடதக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply