சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டம்
இலங்கையில் அண்மையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதற்கு 15க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட தொழிற்சங்களின் புதிய கூட்டமைப்பு ஹட்டனில் நடந்த கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தில் இணங்கப்பட்ட 450 ரூபா அடிப்படை நாட்சம்பளத்தை 520 ரூபாவாக உயர்த்த வேண்டுமென்றும் அந்தக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சந்தர்ப்பங்களை ஒப்பிடும் போது மிகக்குறைந்த வீதத்திலான சம்பள அதிகரிப்புக்கு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த தொழிற்சங்கங்கள் இணங்கிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.
தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply