உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது
வடமத்திய மாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் பரவியுள்ள சிறுநீரகப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று மதவாச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மதவாச்சி மைத்திரிபால சேனாநாயக்கா வித்தியாலயத்தில் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், இத்திட்டத்தின் கீழ் இந்நோய்க்கு உள்ளாகியுள்ள புதிய நோயாளர்களை இனம் காணல், அவர்களைச் சிகிச்சை பெற ஊக்குவித்தல், இந்நோய்க்குரிய சிகிச்சையை நோயாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்றன தொடர்பாக இடம்பெற்று வருகின்றன.
என்றாலும் சிலர் இந்நோயைக் கொண்டு அரசியல் இலாபம் பெற முயற்சி செய்கின்றனர். அதன் மூலம் எந்த நன்மையையுமே பெற முடியாது. அதனால் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு இப்பாதிப்பிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.
அதேநேரம் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமும் விரைவில் செயற்படுத்தப்படும் என்றார்.
வட மத்திய மாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்ளில் பரவி யுள்ள சிறு நீரகப் பாதிப்பு தொடர் பாக 1992ம் ஆண்டு முதல் உள்நாட்டு மருத்துவ நிபுணர்களால் பல மட்டங்களிலும் ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டன.
இந்த வகையில் 2011ம் ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் சில சிபாரிசுகளை முன் வைத்துள்ளது.
இச்சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டமே நேற்று ஆரம்பிக் கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply