காமென்வெல்த் நாடுகளின் தூதர்களுடன் திமுக குழு பேச்சு

காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது. இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன.இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர்.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு மற்றும் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply