புத்தளம் பிரதேச சபை தலைவர் விபத்தில் பலி
புத்தளம் பிரதேச சபையின் தலைவர் திலுக் சுசார பத்தரகே இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இவ்விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியொன்றில் பிரதேச சபைத் தலைவர் பயணித்த கெப் வாகனம் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்துள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதியான சுஜித் குமார காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட திலுக் பத்திரகே கடந்த புத்தளம் பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று புத்தளம் பிரதேச சபையின் தலைவரானார்.
இதற்கு முன்னைய பிரதேச சபையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அதி கூடிய வாக்குகளைப் அவர் பெற்றிருந்;தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உயிரிழந்தவரின் பிரேதம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply