முஸ்லிம்கள் முன்பிருந்த இடங்களில் மீள குடியேற எவ்வித தடங்கல்களும் இல்லை

வடபகுதியிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தாம் முன்பிருந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் முன்பிருந்த இடங்களுக்குச் செல்ல எந்த ஒரு நபருக்கும் தடையில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.இதுவரை வடக்கில் மீளக்குடியமர் வதற்காக 19,875 குடும்பங்கள் பதிவாகி யுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். வடக்கில் மீளக் குடியேறி யுள்ள 19,875 குடும்பங்கள் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதற்கு அதற்குப் பொறுப்பான அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

2013ம் ஆண்டு முடிவடையும் போது தாம் முன்பிருந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் விபரங்களை மாவட்ட ரீதியாக வழங்க முடியும். குறிப்பாக கிளிநொச்சியில் 618 குடும்பங்கள், மன்னாரில் 14,004 குடும்பங்கள், முல்லைத்தீவு 2144 குடும்பங்கள், யாழ்ப்பாணம், 2138 குடும்பங்கள், வவுனியா 971 குடும்பங்கள் என மொத்தம் 19.875 குடும்பங்கள் என கணக்கிடப்பட்டுள்ளன.

2009 மே மாதத்திற்கு மன் இடம்பெயர்ந்தவர்கள் சகல இனங்களையும் சார்ந்தவர்களாயினும் காணி, வீடு போன்ற உதவிகள் கிடைக்கப்பெறாத இடம்பெயர்ந்த குடும்பங்கள் சம்பந்தமாக மீள்குடியேற்ற அமைச்சு ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார். மேற்படி கணிப்பீட்டின் படி உரிய குடும்பங்களுக்கு மஹிந்த சிந்தனை தொலைநோக்கு குறித்த கோட்பாட்டின்படி அவர்களுக்கு தேவையான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஐ.தே.க. எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்விக்கு பதிலளித்து பேசும் போதே அமைச்சர் குணரட்ண வீரக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் நேற்று பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply