அமெரிக்க கார் விபத்தில் 60 பேர் காயம்
அமெரிக்காவின் வேர்ஜினியாவில் பேரணியொன்றில் இடம்பெற்ற கார் விபத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுள் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். வேர்ஜினியாவில் உள்ள சிறிய நகரான டமஸ்கஸில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேரணியொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த காரை நிறுத்துவதற்கு மக்கள் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேரணியில் ஈடுபட்டோரை மோதியவண்ணம் சுமார் 30 மீற்றர் தூரம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply