இந்தியாவுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கை: பாக்கிஸ்தான் புதிய பிரதமர்
பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனால், அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளார். இவர் பிரதமராக பதவியேற்ற உடன், இந்தியாவுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இந்தியாவுக்குள் இனி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்காது என்றும் உறுதி அளித்தார்.
இந்தநிலையில், நேற்று அந்த நாட்டின் இராணுவ தளபதி அஷ்பக் பர்வைஸ் கயானி பிரதமராக பதவியேற்க இருக்கும் நவாஸ் ஷெரீபை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது கயானி, ´இந்திய – பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவதில் கடந்த 10 ஆண்டுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உறவை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடன், நிதானமாக இருக்க வேண்டும். அது தான் பிராந்தியத்தில் நிலையான அமைதியைக் கொண்டு வரும்.´ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply