இலங்கை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா இல்iலா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் குறித்து அண்மையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். காணிப் பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கத் தூதுவருடன் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply