இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவப் படகுகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வது- அவ்வாறு நுழையும் மீனவர்களுக்கு எதிராகத் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பிலும் திட்டமொன்றைத் தயாரிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் எவருடைய வேண்டுகோளின் பேரிலும் விடுவிக்கப்படமாட்டார்கள். உரிய சட்ட நடவடிக்கையின் பின்னரே விடுவிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களைத் தடுக்க இந்திய அரசாங்கம் திட்ட மொன்றைத் தயாரிக்கவிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கடல் எல்லை தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் தலைமையில் நடை பெற்ற சந்திப்பொன்றில் இவ் விடயம் குறித்து ஆராயப் பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்திய மீனவர்கள் பலர் நாளாந்தம் சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிப்பது குறித்தும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இதனைத் தடுப்பதற்கு நீண்டகாலத் திட்டமொன்று தயாரிக்கப் படவேண்டுமென்பது குறித்தும் இங்கு வலியுறுத் தப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply