இனவாதத்திற்கு எதிரான சர்வதேச இயக்கம் இலங்கை மீது குற்றச்சாட்டு

இலங்கையில் சுதந்திரமாக ஒன்றுகூட முடியாத நிலைமை காணப்படுவதாக சகலவிதமான ஒடுக்குமுறைகள் மற்றும் இனவாதத்திற்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.

நாட்டின் பல பாகங்களிலும் சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொதுபல சேனா இயக்கத்திற்கு எதிரான மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. வடக்கில் இந்த நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply