ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையை, மீண்டும் ஆரம்பம் முதல் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சட்டத்தரணி சாந்த குமரேசன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முடிவடைந்து அந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் என்கிற மூன்று பேரின் தூக்கு தண்டனையும் உறுதியானது.
இவர்கள் மூவரும் அனுப்பிவைத்துள்ள கருணை மனு மீதான மேல் முறையீடு மனுவும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் புதிய திருப்பமாக மதுரையை சேர்ந்த சட்டத்தரணி சாந்த குமரேசனின் மனு கருதப்படுகிறது.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது,
´ராஜீவ் காந்தி கொலையில் நிறைய மர்மங்கள் உள்ளன. அதோடு விடை காண முடியாத வினாக்களும் அதிகம் உள்ளன. இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டால்தான் பல உண்மைகள், மர்மங்கள் வெளிவரும்.
அப்படி விசாரிக்காமல் விட்டு விட்டால் நேதாஜியின் கொலையில் மர்மம் நீடிப்பது போல ராஜீவ் காந்தி கொலையிலும் மர்மமே நீடிக்கும். இது சரியான நீதி என்று சொல்ல முடியாமல் போக வாய்ப்புண்டு.
அதோடு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவர்களே இப்போது மாற்றுக் கருத்தை கூறி வருகிறார்கள்.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற எனது மனு சரியானதாகவே இருக்கும்.´ என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply