பிரித்தானியப் படையினரால் 80ற்கும் மேற்பட்ட ஆப்கான் நாட்டவர் தடுத்து வைப்பு
பிரித்தானியப் படையினரால் பஸ்டியன் முகாமில் 80 ற்கும் மேற்பட்ட ஆப்கான் நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் பிலிப் ஹேமண்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் 14 மாதங்களுக்கும் மேலாக குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இவர்களை விடுவிப்பதானது பிரித்தானிய துருப்பினர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய துருப்பினர் சந்தேகநபர்களை 96 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்துவைக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தேவையின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்களை தொடர்ந்தும் காவலில் வைத்திருக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட போதே குறித்த ஆப்கான் நாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply