ஆளில்லா விமான தாக்குதலில் 7 பேர் பலி: பலியானோர் தொடர்பில் விபரமில்லை
பாகிஸ்தானின் வடமேல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலின் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது விமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது. அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களால் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பான பிரசாரங்களும் இந்தத் தேர்தலில் முக்கிய இடம்பிடித்திருந்தன.
இவ்வாறான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறைமைக்கு பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளதாக தேர்தலில் வெற்றிபெற்ற நவாஸ் ஷெரிப் தெரிவித்திருந்தார்.
விமானத் தாக்குதல்கள் குறைக்கப்பட வேண்டும் எனவும் இலக்கு தெளிவாக கண்டறியப்பட்டதன் பின்னரே தாக்குதல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவும் இடையில் மேலும் சர்ச்சைகளை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply