இலங்கையில் சீதா தேவிக்கு கோவில்
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசுவழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply