இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களை பதிவு செய்ய விசேட திட்டம்

இடம்பெயர்ந்து உள்ளூரிலும் வெளியூரிலும் வாழும் வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விசேட செயற்றிட்டம் இம்முறை நடை முறைப்படுத்தப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்தது. சேரிப்புறங்களில் வாழ் வோர் பெருந்தோட்டப் பகுதி மக்கள் மற்றும் மிக உயர் மட்டத்தினர் தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதில் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் தொடர் பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படுமென பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார்.

ஜூன் முதலாம் திகதியான நாளைய தினம் வாக்காளர் தினமாக தேர்தல் செயலகத்தினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதனையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மே 30ம் திகதியிலிருந்தே வாக்காளர்களை அறிவுறுத்தும் செயலமர்வுகள் ஆரம்பமாகிவிட்டன. இச் செயற்பாடுகளின் ஒரு அம்சமாகவே உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்வோர் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

வாக்காளர்களாகத் தம்மை பதிவு செய்வதும் கட்டாயம் வாக்களிப்பதும் தமது உரிமை என்பதில் இன்னும் பலர் தெளிவுல்லாமலேயே உள்ளனர். குறிப்பாக தோட்டப் புறங்களில் உள்ளோர் நகர்ப்புறங்களிலும் சேரிகளிலும் வாழ்வோர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது மிகக் குறைவு

அதேபோன்று உயர் மட்டத்தினரிடையேயும் இது தொடர்பில் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. வாக்காளர் பட்டியலை கையளிக்கச் செல்லும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளை உயர் மட்ட வீடுகளில் பாதுகாப்புக் கடமையிலிருப்போர் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. அவர்கள் அந்தப் பத்திரத்தை பெற்றுக் கொண்ட போதும் அது நிரப்பப்படுகிறதா, மீள கையளிக்கப்படுகிறதா என்பதை அத்தகைய வீட்டுரிமையாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

இத்தகையோர் விடயத்தில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்படும். அவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்பட்ட பத்திரங்களை மீளப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாளைய தினம் வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் செயலகமும் கொழும்பு மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பாதயாத்திரைப் பேரணி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையிலிருந்து ராஜகிரி தேர்தல் செயலகத்துக்கு அருகிலுள்ள ஜனாதிபதி கல்லூரி வரை இந்த பாத யாத்திரைப் பேரணி ஊர்வலமாகச் செல்லும். மக்கள் பேரணி மற்றும் வாகனப் பேரணிகள் மூலம் வாக்காளர்களைத் தெளிவுபடுத்தும் பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

இந்த தினத்தில் நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் செயலமர்வுகள் மற்றும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. துண்டூப் பிரசுரங்கள் விநியோகித்தல்இ வீதி நாடகங்களை நடந்துதல் உட்பட பல அம்சங்கள் இதியடங்கும். கொழும்பில் நடைபெறும் பேரணியில் தேர்தல் ஆணையாளர், பிரதி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்டச் செயலாளர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொள்வர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply