ஈராக் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் பலி

ஈராக்கிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியது. அதையடுத்து அங்கு நடந்து வரும் சன்னி ஷியா பிரிவினைவாத குழுக்களின் தாக்குதல்களிலேயே இப்போது நடந்து வரும் தாக்குதல்கள் மிக மோசமானது என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் நடந்து வரும் ஈவு இரக்கமற்ற தாக்குதல்களால் ஈராக் நிலைகுலைந்து போயுள்ளது.

நேற்று ஈராக் மாகாண கவர்னரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த பிரிவினை தாக்குதல்கள் உள்நாட்டு போருக்கு வழிவகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply