புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 10 பேர் பெங்களூரில் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலைச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  அந்த  குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.

இந்த சந்தேநபர்கள் 10 பேரும் 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply