ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (31ம் திகதி) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.  ஜா-எலவில் உள்ள டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சத்திரசிகிச்சை ஒன்றின் பின் நேற்று (30ம் திகதி) அதிகாலை காலமானார்.

இவருடைய பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அன்னாரின் ஜா-எல இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply