மாத்தளை மனித புதைக்குழி: சர்வதேச பொலிஸ் உதவி பெற அனுமதி

மாத்தளை மனித புதைக்குழி விவகார வழக்கு மாத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (31ம் திகதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலதிக விசாரணைகளுக்கென சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சர்வதேச பொலிஸாரின் விசாரணையை அடுத்து டி.என்.ஏ பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்ததாக ஜேவிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு பொது பயன்பாட்டு வழக்கு என்பதால் வழக்கில் பங்குகொள்ள மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு அறிந்துகொள்ளும் பொருட்டு சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பகிரங்க விளம்பரம் வெளியிடுமாறு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இந்த வழக்கிற்கு இன்றைய தினம் மேலும் 22 சத்தியவாக்குமூல மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய வழக்கு விசாரணையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அநுர மெத்தேகொட கலந்து கொண்டதாகவும் ஜேவிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்ற விசாரணை பிரிவினர் வாக்குமூலம் பெற்ற போது மேலும் 6 பேர் முறைப்பாட்டாளர்களாக வழக்கில் இணைந்து கொண்டுள்ளதாக அப்பிரிவு கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் சுனில் வட்டகல உள்ளிட்ட 10 சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளதுடன் ஜேவிபி சார்பில் பா.உ அநுரகுமார திஸாநாயக்கவும் சமூகமளித்ததாக ஜேபிவி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply